தமிழகத்தில் மதசார்பற்ற ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் 

தமிழகத்தில் மதசார்பற்ற ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

திருச்சி : ஜூன்-22

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,நாட்டை பற்றியோ, மக்களைப் பற்றியோ மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காவிரிக்காக பல போராட்டங்களை திமுக தலைவர் கருணாநிதி நடத்தியதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கண்டுகொள்ளாத வகையில் ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், திமுக தலைமையில் மதசார்பற்ற ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Related Posts