தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : மே – 02

தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் வெப்பச்சலனம் ஏற்பட்டு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காற்றின் வேகம் மற்றும் திசை மாறுபாடு காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, மதுரை, கரூர் மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை நிலவும், என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts