தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சை, கோவை, தேனி, நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Posts