தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : ஏப்ரல்-25

ஒடிசா முதல் தென் தமிழகம் வரை வளிமண்டலத்தின் மேலடுக்கில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், குமரி மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடலோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Posts