தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை  : ஏப்ரல்-19

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையும் அதற்கு மேல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சியும் நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் தெற்கு மற்றும் தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்றும் இதன் காரணமாக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts