தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள்  நடமாட்டம் இல்லை

தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள்  நடமாட்டம் இல்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவை உறுப்பினர் கருணாசின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி எனவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.. தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் எதுவும் இல்லை என்ற அவர், தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த திட்டமானாலும் அதனை தமிழக அரசு எதிர்க்கும் என்று தெரிவித்தார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார் என்று  துணை முதல்வர் பன்னீர்செல்வம் பாராட்டினார்.

Related Posts