தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என்று 879 இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

இன்று முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இன்று காலை முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கலந்தாய்வும், பிற்பகல் முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறவுள்ளது.

இதற்கான தரவரிசைப் பட்டியல் மார்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்.டி., எம்.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 6,188 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், மே 5-ஆம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

Related Posts