தமிழகத்தில் மூன்றாவது மொழி ஹிந்தி -மாபா பாண்டியராஜன்

தமிழகத்தில் ஹிந்தி மூன்றாவது மொழி தான் என தமிழ் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஆவடி அருகே பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளத்தை அமைச்சர் மா.பா பாண்டியராஜன் பூஜை செய்து பணியை துவங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து ஆவடி பேருந்து நிலையத்தில் தடம் எண் 206 பூந்தமல்லி வழியாக தாம்பரம் வரை செல்லும் 7 புதிய பேருந்து சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்த அமைச்சர் மாபா பாண்டியராஜன், அதில் பயணம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஹிந்தி என்பது தமிழகத்தில் மூன்றாவது மொழி என்று மத்திய அரசு ஏற்று கொண்ட ஒன்று அதை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது என்று தெரிவித்தார்.

Related Posts