தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான லட்சுமிபுரம், தேவதானப்பட்டி, கும்பக்கரை, சோத்துப்பாறை, தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாகமழை பெய்தது.

நாகப்பட்டினத்தில் சில தினங்களாக வெயில் வாட்டிய நிலையில் மாலை முதல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

இதனிடையே, வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts