தமிழகத்தில் மேலும் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு : மே-20

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேவுள்ள முருகன்புதூர் பவளமலை முருகன் கோயிலுக்கு செல்லும் தார் சாலையை புதுப்பிக்கும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மேலும் 3 ஆயிரம் பள்ளிகளில், எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் மூலமாக ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். அரசு பள்ளி ஆசிரியர்கள் அவர்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட செங்கோட்டையன், 468 கோடி ரூபாய் மதிப்பில் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் இணையதள வசதியுடன் கணினி கல்வியை கற்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

Related Posts