தமிழகத்தில் ராகுல்காந்தியின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது: கே.எஸ். அழகிரி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜகவிடம் அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு விலக்கு பெற அதிமுகவிற்கு தைரியம் கிடையாது என தெரிவித்தார்

மேலும் காங். தேர்தல் அறிக்கையில் விரும்பும் மாநிலத்திற்கு மட்டுமே நீட் தேர்வு விரும்பாத மாநிலத்திற்கு ரத்து என கூறியுள்ளதாகவும்  அப்படி பாஜகவினரால் தெளிவாக சொல்லிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

பாஜக ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது என்று கூறிய கே.எஸ்.அழகிரி பாஜக கொண்டு வந்த திட்டத்தால் மக்கள் பிரச்சனை தீர்ந்தது என ஒரு திட்டத்தைக் கூட அவர்களால் சொல்லமுடியாது என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அமைதி நிலவும் என்று கூறியிருந்தால், காங்கிரஸ் பாகிஸ்தான் உடைய ஏஜென்ட் என்று பாஜக கூறி இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts