தமிழகத்தில் ரெட் அலர்ட்டை எதிர்கொள்ள சுகாதாரதுறை தயார் நிலையில் இருக்கிறது

தமிழகத்தில் ரெட் அலர்ட்டை எதிர்கொள்ள சுகாதாரதுறை தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

      சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில் அணுகூறு புற்றுநோய் உயர் சிகிச்சை பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மோதெரப்பியால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை  உயர் மிகை அனுகூறு சிகிச்சை மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என கூறினார். இந்த சிகிச்சை பிரிவுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, இந்திய அனுஆற்றல் கட்டுபாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற்று தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ரெட் அலர்ட்டை எதிர்கொள்ள சுகாதார துறை தயார் நிலையில் இருப்பதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Related Posts