தமிழகத்தில் வருமானவரித்துறை சோதனை எதற்கு?: கமல்ஹாசன் கேள்வி

 

 

தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை எதற்கு என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்வருமான வரித்துறை சோதனை கண்துடைப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாகவும்,இதுவரை தமிழகத்தில் நடத்தப்பட்ட ரெய்டுகளில் சிக்கிய பணமும், தங்கமும் என்னவாகின எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் சென்னை அயனாவரத்தில் சிறுமி என்றும் பாராமல் பலாத்காரம் செய்தவர்களுக்காக மனிதாபிமானம் பார்க்க தேவையில்லை என்று கண்டனம் தெரிவித்த கமல், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Related Posts