தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இது தொடர்பாக, மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைதாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் ஏற்கனவே வாக்குக்கு பணம் கொடுக்கும் விவகாரத்தால் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்ட ஒரு கசப்பான வரலாறு இருக்கிறது என்றும், இந்த முறையும் அனைத்து கட்சியினரும்வாக்கிற்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும்  மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்திய தேர்தல் ஆணையமும் முடிந்த வரையில்  இதனை தடுத்த போதிலும், அநேக இடங்களில் பணம் பட்டுவாடா நடந்து வருவதாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார். . எனவே, உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஒரு குழுவை அமைத்து பணப்பட்டுவாடாவை தடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும்  இந்த மனுவை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.  இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இதுபோன்ற அதிகமான வழக்குகளை நீதிமன்றம் ஏற்கனவே சந்தித்துள்ளதாகவும், தற்பொழுது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும்  தெரிவித்தது. . அடுத்த வாரங்களில் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டால் விசாரிப்பதாக நீதிபதிகள் உறுதி அளித்தனர்.

Related Posts