தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க சாலைகள் முறையாக பராமரிக்காததே காரணம்:  உயர்நீதிமன்ற  கிளை

சாலை விபத்து ஒன்றில்  கர்ப்பிணி புஷ்பா உயிரிழந்தது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது  நீதிபதி கிருபாகரன் கூறுகையில் 1998ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாகியும்  திருத்தம் கொண்டு வரப்படாத்து, ,  பாதிக்கப்பட்டோருக்கான நீதியை மறுப்பதாகும் , என கூறினார்.

 

விதிகளை முறையாக பின்பற்றாதது, போதிய விழிப்புணர்வு இல்லாததால்சாலைகளை முறையாக பராமரிக்காதது போன்ற காரணத்தால் தான் விபத்துகள் அதிகரிப்பதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், விபத்தில் உயிரிழந்த புஷ்பா குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கிய இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்

 

 

Related Posts