தமிழகத்தில் விவசாயத்திற்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் விவசாயத்திற்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

              வேலூர் மாவட்டம், காட்பாடியில் பசுமை பன்னை திட்டத்தின் கீழ் நடைபெறும் காய்கறி அங்காடியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பசுமை பன்னை திட்டத்தின் கீழ் கூட்டுறவுத்துறை மூலம் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பதாகவும், இது மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்க உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், உரத்தட்டுபாடிருந்தால் அந்த கூட்டுறவு சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும்,விவசாயத்திற்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், விதைகளும் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திமுக இன்று ஊழலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது நகைப்பிற்குரியதாக உள்ளது என கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊழலை அறிமுகப்படுத்தியதே திமுக தான் என குற்றம் சாட்டினார்

Related Posts