தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் தகவல்

சென்னை,  திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

சென்னை: மே-12

வெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதாக, மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Posts