தமிழகத்தில் வேதாந்தா, ஓ என் ஜி சி  நிறுவனங்கள் எண்ணெய் கிணறுகள் அமைப்பதை தடுக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் 

இது தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில்  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்,  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை   சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அப்போது செய்தியாளர்களை பேசிய அவர்,

வேதாந்தா, ஓ என் ஜி சி போன்ற நிறுவனங்கள் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும்,  அதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறினார்.மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தலைமை செயலாளரை சந்தித்து,  அது குறித்து மனு கொடுத்துள்ளதகவும் கூறினார்.

மேலும், அவர் பேசும் போது, ஹட்ரோ கார்பன் எடுப்பதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த தடை உத்தரவை தமிழக அரசு கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய, பாண்டியன், உபரி நீரையும் தடுக்கும் பொருட்டு காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி முயல்கிறார் என குற்றம் சாட்டிய அவர்,   ராசிமணலில் புதிய அணை தமிழகத்துக்காக  கட்ட வேண்டும் எனவும், அதன் மூலம் தண்ணீர் மற்றும் விவசாய பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 

 

Related Posts