தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியீடு

 

 

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன. தேர்வு முடிவு வெளியான சில நிமிடங்களில் பெற்றோரின் கைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தேர்வு இயக்க்கம் தெரிவித்துள்ளது. இத்தேர்வு முடிவுகள் tnresults.nic.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் புதன்கிழமை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts