தமிழகத்தில் 13 ஓட்டுச்சாவடிகளில், வரும் 19ம் தேதி மறு ஓட்டுப்பதிவு நடைபெறும்: சத்யபிரதா சாஹூ 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவின் போது சில இடங்களில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடைபெற்றதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை செய்தார். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் 46 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், 13 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, தேனி உள்ளிட்ட தொகுதிகளில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் வரும் மே 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ அறிவித்துள்ளார்.

Related Posts