தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன், தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களிலும், சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது என்றார். இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் எனவும், வளிமண்டல சுழற்சி காரணமாக மேக கூட்டங்கள் திரண்டு வருவதால் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு வாரமாக தினமும் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்கிறது. நேற்று மாலையும் வடபழனி, கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி, அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, கீழ்ப்பாக்கம், முகப்பேர் உள்பட பல இடங்களில் மழை பெய்தது. இன்று அதிகாலையிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Related Posts