தமிழகத்தில் +2 பொதுத்தேர்வில் 91.3% மாணவ-மாணவிகள் தேர்ச்சி: திருப்பூர் மாவட்டம் முதலிடம் 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது ஏப்ரல் 19-ம் தேதி தேர்வு முடிவை வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் 91புள்ளி 3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல், மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93 புள்ளி 64 சதவீதமும், மாணவர்கள் 88புள்ளி 57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தைத் பொருத்தவரை திருப்பூர் மாவட்டம் 95புள்ளி 37 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு 95புள்ளி 23 சதவீத தேர்ச்சியும், பெரம்பலூர் 95புள்ளி 15 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. கோவை 95புள்ளி01 சதவீதம், நாமக்கல் 94புள்ளி97 சதவீத தேர்ச்சியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆயிரத்து 281 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தேர்வு எழுதிய கைதிகள் 45 பேரில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அரசு தேர்வுகள் இயக்குநரக அதிகாரி ஒரவர் தெரிவித்தார்.

Related Posts