தமிழகத்தில்  24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில்  24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.. கடந்த 18-ந்தேதி ஒரே நாளில் திருவள்ளூரில் 22 செ.மீ. மழை பதிவாகியது. இதேபோல், தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்றும், நாளையும்  திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்ள்ளது  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,  எனவும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் தமிழகத்தில்   கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

Related Posts