தமிழகத்தில் 46 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு: சத்ய பிரதா சாகு

 சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,   தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஈரோட்டிற்கு 20 வாக்குப்பதிவு இயந்திரங்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தலைமை தேர்தல் ஆணையம் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடும் பட்சத்தில் அதற்கு தயாராக இருக்கும் வகையில் இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மறு வாக்குப்பதிவு நடக்குமா என்பதை உறுதியாகவே சொல்ல முடியாது என் சத்ய பிரதா சாகு, தமிழகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் முழு தகவல்களை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அன்று மாதிரி வாக்குப்பதிவு நடத்திய போது 46 மையங்களில் தவறு நடந்துள்ளதாக சாகு குறிப்பிட்டார். தேனிஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களின் 15 தொகுதிகளில் உள்ள 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். இது பற்றி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டதாக குறிப்பிட்ட சாகு,  அங்கு மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்து விரைவில் முடிவு வரும் என கூறியுள்ளார். ஏற்கனவே 10 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு தமிழக தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்றும்.  மேலும் தேனிக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக திமுகவுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த 156 கோடி ரூபாயில் 144 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டதாக அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

Related Posts