தமிழகத்தில் 77லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன் பெறும்

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 77லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன் பெறும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்துடன், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் திட்டத்தை   சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்தறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 10பயனாளிகளுக்கு காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான முன் அனுமதியினையும் வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர்

தமிழகத்திலுள்ள 77 லட்சம் ஏழை குடும்பங்களிலுள்ள சுமார் 2கோடியே 85 லட்சம் பேர்  இனி ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான கட்டணமில்லா இலவச மருத்துவ சேவையை காப்பீடு திட்டத்தின் கீழ் அதற்கானமருத்துவமனைகளில் பெறமுடியும் என்று கூறினார்.  மேலும் உயர்நிலை சிகிச்சைகளான காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை, செவி புல மூளை தண்டு உள் வைப்பு அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு 25 லட்சம் ரூபாய் வரையிலும் தமிழ்நாடு அரசின் மைய நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருவதை இத்திட்டத்தில் இணைக்கப்படும் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தொடர்ந்து வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts