தமிழகத்தில் 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

2018- 19 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது வரை 791 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு 1.21கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் மேலும் கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்க சிறப்புக்குழு அமைப்பது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக கொத்தடிமைத் தொழிலாளர்கள் ஒழிப்பு முறைச் சட்டம் குறித்து சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில்
தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts