தமிழகத்தைச் சேர்ந்த ராமசுப்பரமணியன் உள்பட 4 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

தமிழகத்தைச் சேர்ந்த ராமசுப்பரமணியன் உள்பட 4 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இமாச்சலப்  பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராமசுப்பரமணியன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்தர்பட், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைமை நீதிபதி முரளி கிருஷ்ணா ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts