தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் புயல் உருவாகியுள்ளதை அடுத்து, தமிழகம், கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி : மே-18

ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால், அதற்கு சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடனின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவிலும், சுகுத்தரா தீவின் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் சுமார் 560 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சாகர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு நோக்கி நகர்ந்து, அதன்பின்னர் மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கிச் செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், தமிழகம், கர்நாடகா, கேரளா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள், ஏடன் வளைகுடா கடல் பகுதி மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Posts