தமிழகம், கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியது

தமிழகம், கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டெல்லி : மே-30

மாலத்தீவு, லட்சத்தீவு, கேரளாவின் பெரும்பாலான பகுதிகள், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை காலத்தில் சராசரி அளவில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. 2011ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆண்டுதான் தென்மேற்குப் பருவ மழை முன்கூட்டியே தொடங்கியிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Posts