தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை  பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : ஜூன்-25

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், வெப்பச் சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிக பட்ச வெப்பநிலை 38 டிகிரியாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரியாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts