தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : ஏப்ரல்-03

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில்,லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்  காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Posts