தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : ஜூன்-30

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், வெப்பச்சலனத்தால், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், தென்தமிழகக் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் கடலுக்குச் செல்லுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

Related Posts