தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்

      இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது எனவும், இதனால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், குமரிக்கடல் மற்றும், லட்சத்தீவு பகுதிகளுக்கு வரும் 8-ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையைப்பொறுத்தவரை மழை விட்டுவிட்டு பெய்யும் எனவும் சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Related Posts