தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : மே-25

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியில் நிலவுகிறது. மேலும், மாலத்தீவு மற்றும் குமரிக் கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts