தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.

சென்னை : மே-15

கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகள், ஏப்ரல் 6-ஆம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் தனித்தேர்வர்கள் உள்ளிட்ட 9 லட்சத்து ஏழாயிரத்து 620 பேர் தேர்வெழுதினர். இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள், மதிப்பெண்களை கம்ப்யூட்டர்களில் பதிவேற்றும் பணிகள், சரிபார்ப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தபடி, நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.  www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைத்தளங்களில் தேர்வு முடிவுகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவை மாணவ, மாணவிகளின் செல்போனுக்கே எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Related Posts