தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : ஜூன்-29

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதற்கிடையே, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த  3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வலுவான காற்று வீசுவதால் கடல் சீற்றமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts