தமிழகம், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : மே-23

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதிகளில் மற்றொரு வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை  ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வறண்ட வானிலையை காணப்படும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts