தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : ஜூன்-21  

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக வலுவிழந்துள்ளது. இதனால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெப்பச் சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில், கடல் சீற்றம் அதிகம் காணப்படும் எனக்கூறியுள்ள வானிலை மைய அதிகாரிகள், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர். 

Related Posts