தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

 

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-18 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. இருப்பினும், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக, தென் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.  

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts