தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும்

தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

      வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கடலில் மணிக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts