தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லுமாறு எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை : ஜூன்-28

தென் தமிழக பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வலுவான காற்று வீசுவதால் கடல் சீற்றமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Posts