தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts