தமிழகம் போல் புதுச்சேரியிலும் பால் விலை உயர்வு

பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த வாரம் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தச் சூழலில் புதுச்சேரியிலும் தற்போது  பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் பால் கொள்முதல் விலையும் லிட்டருக்கு  4 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை புதுச்சேரி அரசு சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளது.

Related Posts