தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு உள் கர்நாடகா பகுதியில் இருந்து தமிழகத்தின் மன்னார் வளைகுடா வரையில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்   அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும்,தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 8 சென்டிமீட்டரும், கோவையில் 6 சென்டிமீட்டரும், வால்பாறையில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Related Posts