தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு 

Want create site? Find Free WordPress Themes and plugins.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,  தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடும் வெயிலால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையில், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய வெப்பம்  நேரடியாக தாக்கும் வகையில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பகுதியில் 4 சென்டி மீட்டரும், தேனி மாவட்டம் பெரியார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆகிய இடங்களில்  தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts