தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் கடலூர் ஆகிய  மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை சராசரி அளவான 12 சென்டி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டுய நிலையில். 9சென்டி மீட்டர் மழை மட்டுமே பதிவாகி இருக்கிறது. இது இயல்பைவிட 28 சதவீதம் குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts