தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை மைய அறிவுப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குனர் விஜயன் தெரிவித்துள்ளார்.

வட மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குனர் விஜயன் தெரிவித்தார். நீலகிரி மற்றும் கோவையில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்த அவர்,  கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 15 சென்டி மீட்டர் , கோவை மாவட்டம் வால்பாறையில் 14 சென்டி மீட்டர் ., மழை பதிவாகியுள்ளதாக கூறினார்..

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். மத்திய மற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதியில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதால் அப்பகுதிக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் விஜயன் கூறியுள்ளார்.

Related Posts