தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது:  எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் தம்பிதுரை ஆதரித்து தமிழக முதல்வர் அரவக்குறிச்சி,கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா,கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட சித்தலவாய் பகுதிகளில் திறந்த வெளி வேன் மூலம் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாக தெரிவித்தார்.

50 ஆண்டுகாலம் போராடி அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பை பெற்று மத்திய அரசு அனுமதியோடு காவேரி மேலாண்மை வாரியம் அமைத்து விவசாயிகளின் நீண்ட கால பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளதாக அவர் கூறினார்.

தொடர்ந்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர் சிவபதியை ஆதரித்து குளித்தலையில் உள்ள சுங்க கேட் பகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார்

Related Posts