தமிழகம் முழுதும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது

தமிழகம் முழுதும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காவிரி ஆறு பவானி ஆறு அமுத நதி சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் நீராடி வழிபாடுகளை மேற்கொண்டனர். புதுமணத் தம்பதிகள் வழிபாடுகள் செய்து தாலி மாற்றிக்கொண்டனர். விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகள்கனிகளை காவிரித் தாய்க்கு படைத்தனர்.

மேட்டூர் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடுகளை செய்தனர். காவிரி ஆற்றில் புனித நீராடிய மக்கள் அணை முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆடுகோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

ஆடிப் பெருக்கை முன்னிட்டு மக்கள் ஒகேனக்கல் காவிரியாற்றில் புனித நீராடி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். புதுமணத் தம்பதியர் அருவிகளில் குளித்து, காவிரியம்மனை வழிப்பட்டனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் காவிரியாற்றின் பல்வேறு படித்துறைகளில் ஏராளமான மக்கள் திரண்டனர். அம்மா மண்டபம் படித்துறையில் ஆண்களுக்கு 25, பெண்களுக்கு 25 என மொத்தம் 50 ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் கமலாலயக் குளத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமணத் தம்பதிகள்சுமங்கலிப் பெண்கள்திருமணம் ஆகாத பெண்கள் உள்ளிட்டோர் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், காவிரியை கன்னிப் பெண்ணாக கருதி கருகுமணிவளையல்காப்பரிசிகண்ணாடிபழவகைகள் உள்ளிட்டவற்றை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Related Posts