தமிழகம் முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்

கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு தவறினால் சிறைக்குச் செல்லும் ஏற்பட்டாலும் போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது சம ஊதியத்தை ரத்து செய்த அரசாணையை எரித்துஅரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துஅப்புறப்படுத்தினர்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ச.மயில்,  கோரிக்கை தொடர்பாக இதுவரை 50க்கும்மேற்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளதாகவும் இது குறித்து அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்குற்றம்சாட்டினார். மேலும் 8-வது ஊதியக்குழுவிற்கு நிகராக ஊதியம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துஅப்புறப்படுத்தினர்.திருச்சியில் அரசாணை எரிப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.வேலூர், திருவண்ணாமலை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில்  நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கைதாகினர்.

Related Posts